🦋 The untold feeling of a Butterfly 🦋

நான் உனை நினைக்கும் போது,

எல்லாம் நீ என் முன்னே தோன்றினாலும்,

உன்னுடன் பேசுவதற்கு எனது இதயம் நடுங்கிக் கிடக்கின்றது...

என் இதயத்திற்கு தெரியும்

இன்னும் சில தினங்களில் நீ மீண்டும் சென்று விடுவாய்யேன்று

என்னுள் அடைமழையாய் எண்ணங்கள் பொழிகிறது

அதில் ஒவ்வொரு துளியும் உனை அடைய வழி தேடுகின்றது

ஒரு துளி ஆவது உனை அடைய வேண்டும் என்ற ஆசை

என்னை நிதமும் வதைக்கின்றது

வலிக்கும் இதயத்திற்கு மருந்தாய் உன் ஒரு வார்த்தை போதும்

ஏங்கும் கண்களுக்கு விருந்தாய் உன் ஒரு பார்வை போதும்

இன்னும் சொல்ல வேண்டியது ஆயிரம்

சொல்ல வேண்டும், கொஞ்சம் நேரம்

கிடைக்குமா?